Prince William marries commoner Kate Middleton | கேட் மிடில்டனை கைபிடித்தார் இளவரசர் வில்லியம்!
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் திருமணம் லண்டனில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
லண்டன் நேரப்படி காலை 11 மணியளவில் (இந்திய நேரம் பிற்பகல் 3.30 மணி) கிறிஸ்தவ முறைப்படி வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, வில்லியம்ஸ் ஐரிஷ் படைகளின் தளபதிக்கான சிகப்பு நிற உடை அணிந்திருந்தார்.
மணமகள் கேட், அரச பாரம்பரிய திருமண முறைப்படி வெள்ளை நிறத்திலான நீள கவுன் அணிந்திருந்தார்.
இத்திருமணத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 அரச குடும்பத்தினர்கள் மற்றும் சர்வதேச பிரபலங்கள், தலைவர்கள் உட்பட 1,900 பேர் கலந்துகொண்டனர்.
வில்லியம் - கேட் திருமண நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிலையில்,அதனை சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.