1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி!

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பலுசிஸ்தான் குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சுயாட்சி கோரி நடத்தப்பட்ட பேரணியில் குண்டுவெடித்ததில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 25க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பலுசிஸ்தானின் ஜஃபராபாத் மாவட்டத்தில் ஜம்ஹூரி வதன் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் ரிமோட்-கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக அந்நாட்டில் ஒளிபரப்பாகும் ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

வல்லரசு நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டு வருவது அந்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் விலகியதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள சமயத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசை மேலும் பலவீனப்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.