இலங்கை மோதல்களில் 5 படையினர் பலி!
இலங்கை வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 16 படையினர் படுகாயமடைந்துள்ளதாக சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மணலாறில் கிரிபென்வெவ, ஜனகபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுதலைப் புலிகள் நடத்திய மோர்ட்டார் தாக்குதலில் 2 படையினர், ஊர் காவல்படை அதிகாரி ஒருவர் என 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் நேற்று நடந்த பல்வேறு மோதல்களில் 6 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னாரில் பாலமொட்டை, பெரியமடு நடுக்கண்டல் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நடத்திய மோர்ட்டார் தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.