1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ஹனீஃப் மீது போடப்பட்ட வழக்கு பலவீனமானது!

ஆஸ்ட்ரேலிய மரு‌த்துவ‌ர்  ஹனிஃப் உளவுத்துறை
லண்டன் பயங்கரவாத சதியில் தொடர்பிருப்பதாக ஆஸ்ட்ரேலிய காவல்துறையால் கைது செய்யப்பட்ட இந்திய மரு‌த்துவ‌ர் ஹனிஃப் மீது தொடரப்பட்ட வழக்கு பலவீனமானது என்றும் இந்த வழக்கு நிற்காது என்றும் அந்த நாட்டு உளவுத்துறை ஏ‌ற்கனவே கூறியதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

தகவல் சுதந்திர சட்டங்களின் படி வெளியிடப்பட்ட ஹனீஃப் வழக்கு விவகார ஆவணங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. அதாவது பயங்கரவாத சதி தொடர்பாக ஹனீஃப் மீது குற்றம்சாட்டப்படுவதற்கு முன்பே அரசு வழக்குகளுக்கான காமன்வெல்த் இயக்குனருக்கு இந்த வழக்கு செல்லுபடியாகாது என்று தெரிந்திருந்ததாக ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

குற்ற‌ச்சா‌ற்று பயங்கரமானது எனினும் ஹனீஃபிற்கு இதில் ‌பிணை ‌விடுதலை கிடைத்து விடும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கே தெரிந்திருந்ததாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன என்று அந்த பத்திரிக்கை செய்தி கூறியுள்ளது.
About Writer
Webdunia