தமிழகத்தையும், இலங்கையையும் இணைக்கும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டுக்களை ராமர் கட்டிய பாலம் என்றும், எனவே சேது சமுத்திர நீர் வழித் திட்டத்திற்காகக் கடலை ஆழப்படுத்தும் போது அதற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் கூறி ஒரு புதிய பிரச்சனையை பா.ஜ.க. உள்ளிட்ட மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளும், இயக்கங்களும் உருவாக்கி வருகின்றன!கடலில் மூழ்கியுள்ள அந்த நிலத் திட்டுக்களின் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்ட நாள் முதல் இதுதான்...