உருக்கு ஆலைகள் கூட்டணி அமைத்துக் கொண்டதற்கான சான்று இல்லை. எனவே இதை ஒழுங்குபடுத்துவதற்கான அமைப்பு ஏற்படுத்தும் தேவை ஏற்படவில்லை என்று உருக்குத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாத், இன்று மக்களையில் எழுத்து பூர்வமான கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். அவர் மேலும் கூறும் போது, சந்தையின் தேவையை பொறுத்தே உருக்கு விலை உள்ளது. சந்தையில் சரக்கு கிடைக்கும் அளவு, இதன் மொத்த தேவைகள், உலக நாடுகளில் விலை ஆகியவை...