1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

உலகின் 10 பணக்காரர்களில் அம்பானி, மிட்டல்!

10 பணக்காரர்கள்  மிட்டல்
உலகின் பணக்கார முதலாளிகள் பட்டியலில் மிட்டல், அம்பானி சகோதரர்கள் முதல் 10 இடத்தில் உள்ளனர்.

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆய்வறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 52 பில்லியன் டாலர் மதிப்புடன் பெர்க்சயர் ஹாத்வே தலைவர் வாரன் புப்பட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவின் மிட்டல் 32 பில்லியன் டாலருடனும், முகேஷ் அம்பானி 20.1 பில்லியன் டாலருடனும், அனில் அம்பானி 18.2 பில்லியன் டாலருடனும், விப்ரோவின் அசிம் பிரேம்ஜி 17.1 பில்லியன் டாலர்களுடனும் உலகின் 10 பணக்கார முதலாளிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
About Writer
Webdunia