1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

குஜராத் அம்புஜா கடலை எண்ணெய் ஏற்றுமதி!

குஜராத் அம்புஜா கடலை எண்ணெய்
சமையல் எண்ணெய் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமான குஜராத் அம்புஜா எக்ஸ்போர்ட் லிமிடெட், ரூ.200 கோடி மதிப்புள்ள கடலை எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ளது.

இந்நிறுவனம் எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் பிழிந்து எடுப்பதுடன், சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலிலும் ஈடுபட்டுள்ளது. இந்த வருடம் சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில், சென்ற வருடத்தை விட அதிக வருவாய் பெற்றுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 10 விழுக்காடு அதிக வருவாய் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
About Writer
Webdunia