சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையின் விதிகளின் படி, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 555 வகையான பொருட்களுக்கு இறக்குமதி வரியை முழுவதுமாக நீக்குதல் அல்லது குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதாக் மத்திய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி நேற்று செய்தியாளர்களிடம்...