1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

டாலரின் மதிப்பு உயர்வு!

அந்நியச் செலவாணி சந்தை இந்திய ரூபாய் டாலர்
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்தது. இன்று 1 டாலர் ரூ.39.81 ஆக முடிந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.78.

காலையில் 1 டாலர் ரூ.39.75/ரூ.39.77 என்ற் அளவில் வர்த்தகம் தொடங்கியது. இன்று 1 டாலர் ரூ.39.67 முதல் ரூ.39.83 வரை விற்பனை செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.68 என நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்தைவிட 17 பைசா அதிகம். நேற்று 1 டாலர் ரூ.39.85 பைசா என நிர்ணயித்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் 1 பவுண்ட் ரூ.81.03, 100 யென் ரூ.36.19 என விற்பனையானது.
About Writer
Webdunia