ஏற்றத்தையும் சரிவையும் மாறி மாறிச் சந்தித்துவந்த பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது!மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே, சென்செக்ஸ் குறியீட்டு எண் 549 புள்ளிகள் அதிகரித்து 19,792.51 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குச் சந்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு, இன்று ஒரு...