1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

செளந்திர பாண்டியன் ஸ்டோரை அரிஹந்த் வாங்குகிறது!

செளந்திர பாண்டியன் ஸ்டோர்ஸ் அரிஹந்த்
சுரானா குழுமத்தைச் சேர்ந்த அரிஹந்த் ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் , வடசென்னையில் உள்ள செளந்திர பாண்டியன் ஸ்டோரை வாங்குகிறது.

வட சென்னையில் வண்ணாரப்பேட்டையில் செளந்திர பாண்டியன் ஸ்டோர் அமைந்துள்ளது. இது இந்த பகுதியில் உள்ள ஜவுளி விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இதை சுரானா குழுமத்தைச் சேர்ந்த அரிஹந்த் ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாங்கியுள்ளது.

சென்னையில் அரிஹந்த் நிறவனம் பல வருடங்களாக ஜவுளி விற்பனையில் ஈடுபட்டுள்ள குறிப்பிடத்தக்க நிறுவனமாகும்.

வட சென்னையில் அரிஹந்த் ஜவுளி கடைக்கு அருகே செளந்திர பாண்டியன் ஸ்டோர் அமைந்துள்ளது.

இது குறித்து சுரானா குழுமத்தின் இயக்குநர் விஷால் சுரானா கூறுகையில், இனி இரண்டு கடைகளும் அரிஹந்த் பெயரில் இயங்கும். ஏற்கனவே உள்ள கடையில் கீழ் தளத்தில் பெண்களுக்கான ஆடைகளும், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் விற்பனை செய்யப்படும்.

முன்பு ஜவுளி வாங்குவதற்கு புகழ் பெற்ற இடமாக வடசென்னை இருந்தது. மீண்டும் அந்த புகழை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்று சுரானா கூறினார்.

வண்ணாரப்பேட்டையில் அரிஹந்த் நிறுவனம் ஹாட்மேல் என்ற பெயரில் ஆண்களுக்கான சிறப்பு ஜவுளி விற்பனை நிலையத்தை திறந்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து அண்ணாநகரிலும் ஹாட்மேல் என்ற பெயரில் ஆண்களுக்கான சிறப்பு ஜவுளி கடையை திறந்துள்ளது.