இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் விறு விறுப்பாக இருந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடனேயே குறியீட்டு எண் 16,890.75 புள்ளிகளைத் தொட்டது. இது நேற்று மாலையில் இருந்ததை விட 45 புள்ளிகள் அதிகம். (நேற்றைய இறுதி நிலவரம் 16,854.83 புள்ளிகள்) இதேபோல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையிலேயே வர்த்தகம் விறு விறுப்பாக இருந்தது. காலையில் தொடங்கியவுடேயே நிப்டி குறியீட்டு எண் 7 புள்ளிகள் அதிகரித்தது (நேற்றைய இறுதி நிலவரம்...