அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என்று நாஸ்காம் வருத்தப்பட்டுள்ளது!பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாஸ்காம் தலைவர் கிரண் கார்னிக், ஜனவரியில் இருந்து ரூபாயின் மதிப்பு 9 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், இது ஐ.டி., ஐடெஸ் ஏற்றுமதி வருவாயை பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளார். ரூபாய் மதிப்பு உயர்வால் நாணய மாற்றலில் ஏற்படும் இழப்பு ஐ.டி. நிறுவனங்களால் தாங்க இயலாது என்றும்,...