1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

பங்கு சந்தைகளில் திடீர் சரிவு

பங்கு சந்தைகளில் சரிவு
வணிகத்தின் இறுதியில் பங்குகள் விற்பனை அதிகரித்ததின் காரணமாக மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் 75 புள்ளிகள் சரிந்தது.

இன்று காலை வணிகத்தில் 113 புள்ளிகள் உயர்ந்து 14,683 புள்ளிகள் எட்டிய மும்பை பங்கு சந்தை, பிறகு பங்குகள் விற்பனை அதிகரித்ததின் காரணமாக 14,465 புள்ளிகளுக்கு குறைந்து பிறகு 14,495 புள்ளிகளை எட்டியது. இது நேற்றைய வணிக முடிவில் இருந்த நிலையை காட்டிலும் 75 புள்ளிகள் குறைவாகும்.

இதுபோல தேச பங்குசந்தையிலும் இறுதி கட்டத்தில் 30 புள்ளிகள் குறைந்து 4,267 புள்ளிகளாக குறைந்தது. உலோகங்கள், மூலதன இயந்திரங்கள் எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றின் பங்குகளில் இந்த சரிவு ஏற்பட்டது.
About Writer
Webdunia