1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

த‌ங்க‌ம் ஒரு ‌சவரனு‌க்கு ரூ.400 உய‌ர்வு

தங்கம் ஒரு சவரனுக்கு ரூ400 உயர்வு
வரலாறு காணாத வகையில் தங்கம் விலை நேற்று ஒரசவரனு‌க்கு ‌ு.400 உய‌ர்‌ந்து ஒரு பவுன் ரூ.10,408க்கு விற்பனையானது.

சர்வதேச அளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடந்த 2 ஆ‌ண்டுகளாகவே அ‌வ்வ‌ப்போது தங்கத்தின் விலை அ‌திகப‌ட்சமாக உய‌ர்வது‌ம், குறை‌ந்த ப‌ட்சமாக குறைவது‌மாக இரு‌ந்து வரு‌கிறது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.1251-க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று காலை த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.1301-க்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு சவரன் விலை ரூ.10,408. அதாவது ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்தது. ஆனால் நேற்று மாலையில் மீண்டும் ஒரு கிராம் ரூ.1288-க்கு குறைந்தது.
About Writer
Akshesh Savaliya