1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

ஆதித்யா பிர்லா உர ஆலை மூடல்

ஆதித்யா பிர்லா நிவோ நிறுவனம் உர ஆலை
உத்தரப்பிரதேச மாநிலம் ஜக்திஷ்பூரில் இயங்கிவரும் தங்களது உர ஆலையை தற்காலிகமாக மூடியு‌ள்ளதாக ஆதித்யா பிர்லா நிவோ நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் செய்துவரும் வேலை நிறுத்தத்தின் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து ஜனவரி 7 ஆம் தேதியிலிருந்து உர ஆலையை மூடியுள்ளதாக ஆதித்யா பிர்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடையில்லாம‌ல் எரிவாயு கிடைக்கும் தருவாயில் மீண்டும் ஆலைப் பணி தொடங்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.