1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

வோல்ஸ் வேகன் விலை குறைப்பு

வோல்ஸ் வேகன் ஜீட்டா பஸாட்
மும்பை: வோல்ஸ் வேகன் கார் தயாரிப்பு நிறுவனம், அதன் ஜீட்டா, பஸாட் ரகம் உட்பட எல்லா ரக கார்களின் விலையை குறைத்துள்ளது.

இது குறித்து வோல்ஸ் வேகன் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜோரிக் முல்லர் கூறுகையில், மத்திய அரசு அறிவித்துள்ள வரி குறைப்பின் முழு பயன்களை, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளோம்.

அரசு பொருளாதார மந்தநிலையை போக்க எடுக்கும் நடவடிக்கைக்கு, எங்கள் ஆதரவை தெரிவித்துள்ளோம்.

இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த நிறுவனம் ஜீட்டா ரக கார் விலையை ரூ.45,194, பஸாட் ரக காரின் விலையை ரூ.80,859 குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
About Writer
Webdunia