ஐஸ் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம்!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மின்சாரம் நிறுத்தப்படுவதை எதிர்த்து ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளன.
இதனால் இந்த மாவட்டத்தில் மீன் பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடி தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த மாவட்டதிலும், இதனை ஒட்டி உள்ள கடல் கரை பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள், கடலில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இது பல மாவட்டங்களுக்கும்,. அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்டுகிறது. இவை ஐஸ் கட்டிகள் வைத்து பாதுகாப்பாக அனுப்பப்டுகின்றன.
இங்கு மின் வெட்டு இருப்பதால், அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் ஐஸ் கட்டிகள் தயாரிக்க முடிவதில்லை.
மின் வெட்டை கண்டித்து ராமநாதபுரத்தில் உள்ள 34 ஐஸ் தொழிற்சாலைகளும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளன. இவை ஐஸ் உற்பத்தியை நிறுத்தியுள்ளன,
இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் கடல்சார் உணவு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில அரசு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் வரை, ஐஸ் கம்பெனிகளின் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.