இந்தியாவில் உள்ள தொழில் வர்த்தக நிறுவனங்களில் அந்நிய நாட்டைச் சேர்ந்த தனி நபர்கள் 60 பில்லியன் (6,000 கோடி) டாலர் முதலீடு செய்ய தாயராக உள்ளனர் என்று யென் எக்ஸ்போ என்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனம் கூறியுள்ளது. சர்வதேச அளவில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வழிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, பங்குச் சந்தை வாயிலாக முதலீடு செய்வது. இந்த நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில்...