பாரத ஸ்டேட் வங்கி உரிமைப் பங்குகளை வெளியிட்டு ரூ.16 ஆயிரத்து 736 கோடி திரட்டுகிறது. இந்த உரிமை பங்கு வெளியிடுவதற்கு இன்று மும்பையில் கூடிய வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் தெரிவித்தது. இந்த உரிமை பங்குகள் 5:1 என்ற விகிதத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் (இதன் படி தற்போது 5 பங்குகளை வைத்துள்ளவர்களுக்கு 1 பங்கு ஒதுக்கப்படும்). பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கு, ரூ.1,580 பிரிமியத்தில் ஒரு உரிமை பங்கின் விலை...