தொலை தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு 10 பில்லியன் டாலர் (1 பில்லியன் நூறு கோடி) நிதி திரட்டப் போகிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த போது இதை மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஏ. ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இது பற்றி...