1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

பாங்க் ஆஃப் இந்தியா பங்கு வெளியீடு!

பாங்க் ஆஃப் இந்தியா பங்கு வெளியீடு
பாங்க் ஆஃப் இந்தியா தகுதி உள்ள நிறுவனங்களுக்கு பங்குகளை வழங்கி முதலீடு திரட்ட போவதாக அறிவித்தது.

இந்த வங்கி 3,77,72,600 பங்குகளை ஒதுக்கீடு செய்ய உள்ளது. இது பற்றி ஜனவரி 23 தேதி நடைபெற உள்ள வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்த வங்கி பங்குகளை பொதுத்துறை நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கி முதலீடு திரட்டுவதற்கு ஏற்கனவே மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
About Writer
Webdunia