13 வது நிதி ஆணையத் தலைவராக முன்னாள் நிதித் துறை செயலாளரும், நிதி அமைச்சரின் ஆலோசகருமான டாக்டர் விஜய் கேல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிதி ஆணையம் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான வரிவருவாய் பங்கீடு குறித்த அறிக்கையை அரசுக்கு அளிக்கும். 2005 -2010 ஆம் ஆணடுக்குள் மாநில் அரசுகளின் கடனை குறைத்து, அவைகளின் நிதி நிலையை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசுக்கு பரிந்துரைக்கும். மாநிலங்களுக்கு இடையிலான சமச்சீர் வளர்ச்சிக்கு பொருளாதார...