குறைந்த விலையிலான அடிப்படைப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் ரூபாயின் பணவீக்க விகிதம் ஆகஸ்ட் 4 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.05 விழுக்காடாக குறைந்துள்ளது!அதற்கு முந்தைய வாரத்தில் 4.45 விழுக்காடாக இருந்த பணவீக்கம், பழங்கள், காய்கறிகள், பண்ணைக் கோழி ஆகியவற்றின் விலைகள் 5 விழுக்காடு குறைந்ததாலும், கம்பின் விலை 3 விழுக்காடும், கடலை, கடல் மீன் விலைகள் ஒரு விழுக்காடு குறைந்ததாலும் இந்த அளவிற்கு குறைந்துள்ளது. ஆயினும், தேநீர் 7...