உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் ரூபாயின் பணவீக்க விகிதம் ஜூலை 21 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.36 விழுக்காடாக குறைந்துள்ளது!இந்திய மைய வங்கி அறிவித்த காலாண்டு நாணயக் கொள்கை அறிக்கையும், பணப்புழக்கம் குறைக்கப்பட்டதாலும் ஒரு வார காலத்தில் 0.05 விழுக்காடு பணவீக்கம் குறைந்துள்ளதற்கு மற்றொரு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. முட்டை 6 விழுக்காடு, ஆட்டுக்கறி 4 விழுக்காடு, கடல் மீன் 3 விழுக்காடு, பருப்பு, மக்காச்சோளம், வாசனைப் பொருட்கள்,...