1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

ரூபாய் மதிப்பு 15 பைசா சரிவு

டாலர்
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா சரிந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் தொடர்ந்து நான்கு நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வந்த, ரூபாயின் மதிப்பு இன்று குறைந்தது.

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்யும். இவைகளுக்கு டாலர் தேவைப்படும் என்பதால் வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்கின. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளும் டாலரை வாங்கியதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.12 ஆக அதிகரித்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 15 பைசா உயர்வு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.97-48.98.
About Writer
Webdunia