1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

ரூபாய் மதிப்பு 25 பைசா சரிவு

அந்நியச் செலவாணி சந்தை டாலர்
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.20 ஆக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 25 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.46.95-46.96 பைசா.

பல்வேறு நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததாலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று கடந்த பதினோறு மாதங்களில் இல்லாத அளவிற்கு டாலரின் மதிப்பு 71 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
Webdunia