1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

ரூபாய் மதிப்பு 37 பைசா உயர்வு!

அந்நியச் செலவாணி சந்தை டாலர்
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 பைசா அதிகரித்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 49.72 பைசாவாக இருந்தது.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.50.09.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இதனால் இந்திய பங்குச் சந்தையிலும் சாதகமான நிலை இருந்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இன்று பங்குகளை விற்பனை செய்யமாட்டார்கள் என்று கருதி, வங்கிகள் அதிக அளவு டாலரை விற்பனை செய்தனர் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பு குறைந்துள்ளது. இதுவும் இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பதற்கு மற்றொரு காரணம்.
About Writer
Akshesh Savaliya