1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டாலர் மதிப்பு 5 பைசா உயர்வு!

ரிசர்வ் வங்கி டாலர் யூரோ யென் பவுன்ட் ஸ்டெர்லிங்
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்தது.

வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.49.72 பைசா என்ற அளவில் இருந்தது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா அதிகம்.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.67.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் ரூ. 49.70. முதல் ரூ.49.10 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆசிய நாட்டு சந்தைகளின் பங்குச் சந்தைகளில் பாதிப்பு இருந்தது. இதை தொடர்ந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையிலும் பங்குகளை விற்பனை செய்யும். இதனால் டாலரின் தேவை அதிகரிக்கும் என்பதால், இதன் மதிப்பு அதிகரித்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.49.74 பைசா.
1 யூரோ மதிப்பு ரூ.62.78
100 யென் மதிப்பு ரூ.51.47
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.74.37.
About Writer
Webdunia