1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 18 பைசா ச‌ரிவு!

இந்திய ரூபாய் அன்னியச் செலாவணி சந்தை
கட‌ந்த 5 வருட‌ங்க‌ளி‌ல் இ‌‌ல்லாத அளவாக அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 18 பைசா சரி‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தை கட‌ந்த ‌தி‌ங்க‌‌ளன்று நிறைவடையும் போது ரூ.46.95 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியது‌ம் ரூ.47.13 ஆக ச‌ரி‌ந்தது.

நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.46.92ல் இரு‌ந்து ரூ.‌47.23 ஆக காண‌ப்ப‌ட்டது.

தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியின் காரணமாக மேலும் சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
About Writer
Webdunia