1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 6 பைசா உய‌ர்வு!

இந்திய ரூபாய் அன்னியச் செலாவணி சந்தை அமெரிக்க டாலர்
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 6 பைசா உய‌ர்‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தை நேற்று நிறைவடையும் போது ரூ.46.21 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியது‌ம் ரூ.46.15/17 ஆக உய‌ர்‌ந்தது.

நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.46.15ல் இரு‌ந்து ரூ.‌46.56 ஆக காண‌ப்ப‌ட்டது.

மாத முடிவு எ‌ன்பதாலு‌ம், க‌‌ச்சா எ‌ண்ணெ‌ய் ‌விலை உய‌ர்வாலு‌ம், வ‌ங்‌கிக‌ள் வேலை ‌நிறு‌த்தம் முடிவடைந்ததாலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் ம‌தி‌ப்பு‌ உய‌ர்‌ந்து‌ள்ளதாக வ‌ர்‌த்தக‌ர்க‌ள் கரு‌த்து தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
About Writer
Webdunia