1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை இன்று
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றும் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இன்று மும்பையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.15ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.35 குறைந்தது.

டாலரின் மதிப்பு குறைவதாலும், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பதாலு‌‌ம் அந்நிய சந்தைகளில் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

நியுயார் சந்தையில் வெள்ளிக் கிழமையன்று, 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 889.00/890.25 டாலராக அதிகரித்தது. அதற்கு முந்தைய நாள் விலை 886.30/888.30 டாலர். 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலையில் 16.91/16.96. அதற்கு முந்தைய நாள் விலை 16.82/16.88 டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,960
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,905
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,350
About Writer
Webdunia