மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் இருந்த நிலைமை மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாறியது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு எல்லா பிரிவில் உள்ள பங்குகளின் விலைகளும் படிப்படியாக அதிகரிக்க துவங்கின. முதலீட்டு நிறுவனங்களும், மற்ற பிரிவு முதலீட்டாளர்களும் அதிகளவு பங்குகளை வாங்கினார்கள். இதனால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 164.59 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் இதற்கு முன்பு இல்லாத வகையில் 20,465.30 புள்ளிகளாக...