1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. க‌ல்‌வி

வேலைவாய்ப்பு அலுவலக‌த்‌தி‌ல் புது‌ப்‌பி‌க்காதவ‌ர்களு‌க்கு ‌மீ‌ண்டு‌ம் வா‌ய்‌ப்பு!

வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌‌ம் சலுகை காக‌ர்லா உஷா
வேலைவா‌ய்‌ப்பஅலுவலக‌ங்க‌ளி‌லகட‌ந்த 2007ஆ‌மஆ‌ண்டப‌திவபுது‌ப்‌பி‌க்க‌ததவ‌றியவ‌ர்க‌ளு‌க்கஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌சிற‌ப்பசலுகையவரு‌ம் 5 ஆ‌மதே‌தி வரபய‌னபடு‌த்‌தி‌க்கொ‌ள்ளலா‌மஎ‌ன்றசெ‌ன்னமா‌வ‌ட்ஆ‌ட்‌சிய‌ரக‌ர்லஉஷதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல்," வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2007ஆ‌ம் ஆண்டு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையை அரசு வழங்கியுள்ளது. அதன்படி 1.1.2007 முதல் 31.12.2007 வரை புதுப்பிக்க தவறியவர்கள், தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த சலுகை 6.5.2008 முதல் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சலுகையை வரும் 5ஆ‌ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக‌ஸ்‌ட் 5ஆ‌ம் தே‌‌தி‌க்கு‌ப் ‌பி‌ன் வரு‌ம் ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் ‌நிராக‌‌ரி‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
About Writer
Webdunia