வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பிறந்த குழந்தைகளின் ஆடைகளை பராமரிக்க சில வழிகள்....!

பிறந்த குழந்தைகளின் ஆடைகளைச் சுத்தாமாக வைத்திருப்பது மிக அவசியம். குழந்தைகளின் சருமம் மிகமிக மென்மையானது. அவர்களுடய ஆடைகள் சரியான முறையில் பராமரிக்காமல் இருந்தால், சருமத்தில் அலர்ஜி உண்டாகும்.
நோய்தொற்றுகள் உண்டாகவும் வாய்ப்பு அதிகம் அதனால் குழந்தைகளின் ஆடைகளைப் பராமரிக்கும்போது சில அடிப்படையான விஷயங்களை மனதில்  கொள்வது அவசியம்.
 
எந்த வகை ஆடையாக இருந்தாலும் அதிக வெப்பத்தால் பாழாகிப் போகும், அதனால் குளிர்ந்த நீரில் குழந்தைகளின் ஆடைகளைத் துவைத்து, அவற்றை உலர்த்த்தும்போது நிச்சயம் அதிக வெயிலில் காய வைக்கக் கூடாது. மிதமான வெயிலில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்துதல் வேண்டும்.
 
சிரமம் பார்க்காமல், தனித்தனியே ஆடைகளைத் துவைப்பது நல்லது. துணியை துவைக்கும்போது வெளிப்புறம் அப்படியே துவைக்காமல், உள்புறமாகத் திருப்பித்  துவைத்தல் வேண்டும்.
குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவர்களின் ஆடைகளைத் துவைக்கப் பயன்படுத்துகிற டிடர்ஜெண்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடில், குழந்தைகளின் மேனியில் அலர்ஜி ரேஷஸ் போன்றவை உண்டாகும்.
 
குழந்தைகளின் தரமான சுத்தமான ஆடைகள் மட்டுமல்ல, அவற்றை வைக்கும் இடங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். தூசு, ஈரப்பதம் இருக்கும் இடங்களில் குழந்தைகளின் ஆடைகளை வைக்கக் கூடாது. முடிந்த வரையில் உங்கள் குழந்தைகளின் ஆடைகளை தனியாக வைக்கலாம்.