1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Two children were killed in fire accident

தீவிபத்தில் சிக்கி இரு குழந்தைகள் பலி

டெல்லி
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லி ஆதர்ஷ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீவிபத்தில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
தெரு நாய்கள் கடித்து 2 குழந்தைகள் பலி