செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 2 மே 2018 (12:16 IST)

வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட நடிகர் விவேக்....

கோடை காலத்தில் பெண் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்கிறேன் என நடிகர் விவேக் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் சமூகம் சார்ந்த பல கருத்துகளை அவ்வப்போது கூறி வருகிறார். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர் தொடர்ந்து அறிவுரை கூறி வருகிறார்.
 
இந்நிலையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்  “அன்புள்ள மாணவர்களே! குழந்தைகளே! கோடைகாலை விடுமுறையை அனுபவியுங்கள். விளையாட்டிற்கு பின் நிறைய தண்ணீர் குடியுங்கள். மாணவர்களே நீங்கள் உங்கள் தந்தை பணிபுரியும் அலுவகம் சென்று அவர் எப்படி குடும்பத்திற்காக உழைக்கிறார் என பாருங்கள். பெண் குழந்தைகளே! நீங்கள் சமையலறை சென்று உங்கள் தாய்க்கு உதவியாக இருப்பதோடு, சமையலையும் கற்றுக்கொள்ளுங்கள்” என ஒரு பதிவை இட்டிருந்தார்.

 
அவரின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் என்றால் சமையல் வேலைதான் செய்ய வேண்டுமா? இது ஆணாதிக்க சிந்தனை. உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.