புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சிறுநீரக கல்லை கரைத்திடும் வாழைத் தண்டு!!

வாழைத் தண்டு நார்சத்து மிக்கது. வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல், கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. சரியாக சிறுநீர் வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலை பொக்கும்.
நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழை தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் வீதம் தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும்  வரட்டு இருமல் நீங்கும்.
 
வாழையின் உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி, நாரினை நீக்கி சமைத்து உண்ண, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி மற்றும் தாகம் தணியும்.
 
வாழைத் தண்டு காதுநோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். 
வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரைத் தடவத் தேள், பூரான் ஆகியவற்றின் கடியினால் ஏற்படும் வலி குறையும். கோழைக் கட்டு  ஆகியவை இளகும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக  இறங்கிவிடும்.
 
வாழைத் தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். வாழைத் தண்டிற்குக் குடலில் சிக்கியிருக்கும் மயிர், நஞ்சு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குணமுண்டு.
 
வாழைப்பூச்சாற்றுடன் கடுக்காயைச் சேர்த்து அருந்த மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும். கைகால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.