புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

ரோஜா இதழ் இத்தனை மருத்துவ பயன்களை கொண்டதா...?

ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.
ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.
 
பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும்.
ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன் நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு  காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். 
 
ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான  மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. 
 
அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி  புத்துணர்ச்சி ஏற்படும்.