இன்றைக்கு தவறவிடக் கூடாத தரிசனம் – என்னென்ன நன்மைகள் வந்து சேரும் தெரியுமா?

astro
Last Modified ஞாயிறு, 30 ஜூன் 2019 (11:50 IST)
பிரதோஷ நாளான இன்று அனைத்து சிவாலயங்களிலும் நந்திக்கு அபிஷேகம் மற்றும் ஆரத்தி நடைபெறும். ஆனால் இந்த பிரதோஷம் மற்ற பிரதோஷங்களை விட மகத்துவம் வாய்ந்தது ஏன் தெரியுமா?

இன்று சூரியனுக்கும் உகந்த நாள். சூரிய வழிபாடு, பிரதோஷமும் அரிதாகதான் ஒரே நாளில் வரும். இந்த நாளில் சிவ கோவில் சென்று நந்தி வழிபாடு செய்வதால் பல நன்மைகள் நம்மை வந்து சேரும்.

மிதுன லக்கனத்தில் சூரியனும், சுக்கிரனும் ஒரே கட்டத்தில் பயணிக்கின்றன. அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நாளில் சிவனையும், சூரியனையும் வணங்கினால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லைகள் குறையும்.

ஞாயிற்றுகிழமை சூரியநாளான இன்று அனைத்து மக்களும் தூய நல்லெண்ணையில் விளக்கேற்றி சூரிய பகவான் சந்நிதானத்தில் வேண்டி வந்தால் வீட்டு பிரச்சினைகள் குறையும். சுக்கிரன் ஒரே கட்டத்தில் பயணிப்பதால் செல்வமும், மட்டற்ற மகிழ்ச்சியும் வந்து சேரும்.

எனவே இந்த பிரதோஷத்தில் பக்தர்கள் சிவனை வணங்குவதோடு மறவாமல் சூரிய தரிசனத்தையும் செய்து பலனை பெற வேண்டும்.இதில் மேலும் படிக்கவும் :