1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (18:43 IST)

பல்வேறு உடல்நல பிரச்சினைகளை சீர்செய்யும் சோம்பு தண்ணீர் !!

பெருஞ்சீரகம் என்றும் அறியப்படும் சோம்புத் தண்ணீர் பல உடல்நலப் பிரச்சினைகளைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் சோம்பு, கை வைத்தியத்தில் முக்கியமான ஒன்று.


காலையில் எழுந்தவுடன் சோம்பு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், பல பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். தொடர்ந்து சோம்பை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வருவது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அழகையும் மேம்படுத்தும்.

வயிற்று உப்புசத்தைத் தணிக்கும் சோம்பு, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் சீர் செய்கிறது. சோம்புத் தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

சோம்பில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கண்களின் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும். எனவே தினமும் சோம்பை, தண்ணீரில் கலந்து பானமாக எடுத்துக் கொள்வது நல்லது.  

வெறும் வயிற்றில் சோம்புத் தண்ணீரை குடித்தால், உடல் எடையை சீராக வைப்பதோடு, உடல் பருமனையும் கட்டுப்படுத்தலாம்.