திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2019 (14:10 IST)

காதலிக்க மறுத்த ஆண்; முகத்தில் ஆசிட் வீசிய பெண்..

காதலிக்க மறுத்த ஆணின் முகத்தில் இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜகட்பூரை சேர்ந்த அலேக் பரிக் கடந்த செவ்வாய் கிழமை பக்ரி சஹி என்ற இடத்தில் ஒரு இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அலேக் பரிக்கின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, பரிக் கீழே விழுந்து கிடந்தார். உடனே பரிக்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்றது. பின்பு போலீஸார் பரிக்கிடம் விசாரணை நடத்தியபோது, அந்த பெண் தன்னை காதலித்தாகவும், ஆனால் நான் அவளை காதலிக்க மறுத்ததால் ஆசீட் விசீயதாகவும் கூறியுள்ளார்.

காதலிக்க மறுத்ததால் இளம்பெண், ஆணின் மீது ஆசீட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.