செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (16:21 IST)

நான் பாட்டுக்கு சிவனேனு தான டா இருந்தேன்... அண்ணிக்கு நேர்ந்த கொடுமை!

குடிபோதையில் அண்ணியின் மூக்கை அறுத்த மச்சினனால் மொரதாபாத் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
உத்திரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் காலையில், மூக்கு அறுபட்ட நிலையில் ரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
 
சிகிச்சைக்கு பின்னர் அந்த பெண்ணிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், என் கணவருடைய தம்பி கத்தியால் என் மூக்கை அறுத்துவிட்டார் என கூறியுள்ளார். எதனால் இப்படி செய்தார் என எனக்கு தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 
காலை 6 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின்போது, அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். குடிபோதையில் இளைஞர் ஒருவர் தனது அண்ணியின் மூக்கையே அறுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.