"அக்கா ஆன அண்ணி" கார்த்தி படத்தின் டைட்டில் இது தானா?

papiksha| Last Updated: வியாழன், 7 நவம்பர் 2019 (10:23 IST)
கைதி படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி பாபநாசம் பட இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
திரில்லர்  பாணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20ம் தேதி  ரிலீசாகவுள்ள இப்படத்தின் கடைசிகட்ட வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 96 புகழ்  கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் ‘தம்பி’ என்று வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே கூடிய விரைவில் படக்குழுவினரிடமிருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 


இதில் மேலும் படிக்கவும் :