பெண்ணின் வயிற்றில் பஞ்சுத் துணி – பிரசவித்த 5 நாளில் உயிரிழந்த சோகம் !
மகாராஷ்டிரா மாநிலத்தில் அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் பருத்தித் துணிகளை வைத்து தைத்ததால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தனுஸ்ரீ என்ற பெண் தனது பிரசவத்துக்காக தனது தந்தையோடு அவரது ஊருக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு பணிபுரியும் மருத்துவர் தனியாக கிளினிக் வைத்திருப்பதாகவும் அங்கு சென்று சிகிச்சை பார்த்துக் கொள்ளுங்கள் என அவரை அங்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற தனுஸ்ரீ மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அவரைப் பரிசோதித்த அந்த மருத்துவர் அவருக்கு நீர்ச்சத்துக் குறைவாக இருப்பதாகவும் அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதன்படியே அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார் தனுஸ்ரீ. ஆனால் பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட தொடர் வயிற்று வலியால் அவர் 5 நாட்களில் உயிரிழந்துள்ளார்.
அவரது பிரேதப் பரிசோதனையின் போது அவரது வயிற்றில் பஞ்சுத்துணிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட்டுள்ளது. இது அறுவை சிகிச்சையின் போது துடைப்பதற்குப் பயன்படுத்தக் கூடியதாகும். பிரசவத்தின் போது அந்த மருத்துவர் அலட்சியமாக அங்கு வைத்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து போலிஸார் இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.