ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (12:09 IST)

மிஸ் இந்தியா பட்டியலில் ஒரு தலித் பெண் கூட இல்லாதது ஏன்? - ராகுல்காந்தி கேள்வி!

Rahul Gandhi

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் அவசியம் குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மிஸ் இந்தியா போட்டிகளில் தலித், பழங்குடி பெண்கள் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

 

அப்போது அவர் ”இதுவரை மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்களின் பட்டியலில் தலித் அல்லது பழங்குடியின பெண்கள் யாராவது இருக்கிறார்களா என பார்த்தேன். ஆனால் தலித், பழங்குடியினர் அல்லது ஓபிசி பிரிவை சேர்ந்த பெண்கள் கூட அந்த பட்டியலில் இல்லை. ஊடகங்களில் உயர்மட்டத்தில் இருக்கும் தொகுப்பாளர்களில் ஒருவர் கூட இந்த சமூகங்களை சேர்ந்தவர்களாக இல்லை. ஆனால் ஊடகங்கள் தொடர்ந்து கிரிக்கெட், பாட்டு, டான்ஸ், பாலிவுட் பற்றி மட்டுமே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றன.

 

எந்தெந்த அரசு அமைப்புகளில் எந்த சாதியை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர் என்று தரவுகளை முதலில் சேர்க்க வேண்டும். 90 சதவீத மக்களுக்கு திறனும், கல்வியும் இருந்தும் நிர்வாக அமைப்புகளுடன் அவர்கள் தொடர்பில்லாமல் இருக்கின்றனர். அரசியலமைப்பு சட்டம் 10 சதவீத மக்களுக்கானது அல்ல. ஒட்டுமொத்த மக்களுக்கானது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K