வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (10:42 IST)

இந்தியாவுக்கான உங்கள் கனவு தான் எனது கனவு.. அப்பா பிறந்த நாளில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி..!

இந்தியாவுக்கான உங்கள் கனவு தான் நான் எனது கனவு என நான் ராகுல் காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சி உடன் பதிவு செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ’அப்பா நீங்கள் கற்பித்தவை தான் எனக்கு உத்வேகம் அளிக்கிறது, இந்தியாவுக்கான உங்களது கனவு தான் என்னுடைய கனவுகளும் கூட, அவற்றை நான் கண்டிப்பாக நினைவே நிறைவேற்றுவேன். உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்’ என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடி உள்பட பல அரசியல் பிரமுகர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் குறித்து தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran