வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (12:03 IST)

உடைக்க முடியாத அன்பு: ராகுல், பிரியங்காவின் ரக்‌ஷா பந்தன் பாசத்தின் பகிர்வு

நாடு முழுவதும் இன்று ரக்‌ஷா பந்தன் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் பிரியங்காவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆன இன்று ரக்‌ஷா பந்தன் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பாசப்பிணைப்பை பறைசாற்றும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரக்‌ஷா பந்தன் தினத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரியை பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் ரக்‌ஷா பந்தன் நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் தங்கை இடையில் ஆன உடைக்க முடியாத அன்பு பாசம் என்பது ஒரு பண்டிகை. இந்த பாதுகாப்பு கயிறு எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்த உதவட்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு என்பது பூச்செடி போன்றது, வெவ்வேறு வண்ணங்கள், நினைவுகள், கதைகள், நட்பு ஆகியவை அதில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran