Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டிய 4 ஆண்டுகளில் இடிந்து விழுந்த நீர்தேக்கத் தொட்டி! – பரபரப்பு வீடியோ!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 23 ஜனவரி 2020 (10:37 IST)
மேற்கு வங்கத்தில் கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டி ஒன்று கட்டிமுடிக்கப்பட்ட 4 ஆண்டுகளிலேயே இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள சரீங்கா பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு 165 கோடி ரூபாய் செலவில் நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத்திற்காக 2012ல் கட்டத் தொடங்கிய நீர்த்தேக்கத் தொட்டியின் பணிகள் 2015ல் முடிவடைந்தன. கடந்த 4 வருடங்களாக இந்த நீர்தேக்கத் தொட்டியின் மூலம் 20 கிராமங்களும் பயனடைந்து வந்தன.

சில மாதங்களுக்கு முன்பு நீர்த்தேக்க தொட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விரிசல் விரிவடைந்து வந்ததால் நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று வலுவிழந்த நீர்த்தேக்கத் தொட்டி பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

700 க்யூபெக் அளவு தண்ணீர் நிரப்பக்கூடிய பிரம்மாண்டமான நீர்த்தொட்டி சரிந்து விழுந்துள்ளது அந்த பகுதி கிராமத்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் இனிமே ரூ.10 எக்ஸ்ட்ரா வாங்கமாட்டோம்!.. சங்க மாநில தலைவர் பேட்டி...

டாஸ்மாக் முறைகேடு!.. செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு!..

எதிர்காலத்தில் திமுகவை வழிநடத்த தகுதியானவர் யார்? கனிமொழியா? உதயநிதியா? சர்வே முடிவு

7000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று.. அனைத்து கல்லூரிகளிலும் பரிசோதனை செய்ய முடிவு...

விஜய்க்கு ஹெலிகாப்டர் ரெடியா இருக்கு!.. வந்து பார்க்கட்டும் - டி.கே.சிவக்குமார்!...

அடுத்த கட்டுரையில்
Show comments